2003 முதல் வங்கிக்கடன் பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

2003 முதல் சுவிஸ் மத்திய அரசினால் வங்கிக்கடனுக்கு புதிய சட்டவிதிகள் அமுல் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டமானது வருமானம் குறைந்தவர்களுக்கு பெருந்தொகை வங்கிக்கடனை வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வருடம் முதல் வங்கிக்கடனுக்கு அமுல் செய்யப்பட்டுள்ள சட்டவிதிகளின் சிறிய விளக்கம் பின்வருமாறு. இச்சட்டத்தின் மேலதிக விளக்கம் தேவையெனில் தயவு செய்து அஞ்சலி பினான்ஸ்சுடன் தொடர்பு கொள்ளவும்

• வங்கிக்கடனுக்கு விண்ணப்பிப்பவரின் மாத சம்பளத்தில் கையில் கிடைக்கும் தொகையில் (Nettolohn) அடிப்படைச் செலவுகள், வீட்டுவாடகை, மருத்துவக் காப்புறுதி மற்றும் பிள்ளைகளின் செலவுகள் (பிள்ளைகளின் செலவுகள் அவர்களின் பிறந்த ஆண்டின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டுள்ளது) போக மிகுதியாகவுள்ள தொகையின் 36 மடங்குகள் வங்கிக்கடனாக பெறமுடியும். (உதாரணமாக மிகுதி தொகை 800.00 சுவிஸ் பிராங்காக இருப்பின் அதன் 36 மடங்குகள் 28800.00 சுவிஸ் பிராங் ஆகும்).

• அவ்வாறு 36 மடங்குகள் கணிப்பிடப்படும் தொகையானது முதலும் வட்டியுமாகும்

• வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஒரு வருடம் முதல் ஐந்து வருடம் வரை முடிவு செய்யலாம்.

• திருப்பிச் செலுத்தும் காலத்தை ஐந்து வருடமாக முடிவு செய்யும் போது கையில் கிடைக்கும் முதலின் தொகை குறைவடையாது.

• மாதாந்தம் திருப்பிச் செலுத்தும் தொகை மிகுதி தொகையிலும் கூடுதலாக இருக்க கூடாது (உதாரணமாக மிகுதி தொகை 800.00 சுவிஸ் பிராங்காயின் திருப்பிச் செலுத்தும் தொகை அதற்குட்பட்டதாக இருக்க வேண்டும்).

• வங்கிக்கடனுக்கு விண்ணப்பிப்பவரின் விண்ணப்பம் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு வங்கிக்கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட திகதியை விடுத்து மறு நாளிலிருந்து பதின்நான்கு (14) நாட்களின் பின்னரே பணம் பெறமுடியும். (01.01.2016 இலிருந்து நடைமுறையிலுள்ளது)

அதனால் உங்கள் வங்கிக்கடன் விண்ணப்பங்களை சுவிஸ்சில் சிறந்த முறையிலும், அனுபவரீதியிலும் செயற்படும் அஞ்சலி பினான்ஸ்சிடம் விண்ணப்பித்து பெருந்தொகை பணத்தை குறைந்த வட்டி வீதத்தில் பெறுவதற்கு முயற்சி செய்யவும்.

இப்படிக்கு

அஞ்சலி பினான்ஸ் நிர்வாகம்